கொரோனா தாண்டவம்: தொடரும் பங்குச்சந்தை வீழ்ச்சி - வர்த்தகம் 45நிமிடம் நிறுத்தம்

மும்பை : கொரோனா அச்சுறுத்தலால் இந்திய பங்குச்சந்தைகள் தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இன்றைய (மார்ச் 23) வர்த்தக நேர தொடக்கத்தில் சென்செக்ஸ் 2700 புள்ளிகளும், நிப்டி 780 புள்ளிகளும் வீழ்ந்த நிலையில் ஒருக்கட்டத்தில் சென்செக்ஸ் 3500, நிப்டி 1000 புள்ளியும் சரிவை சந்தித்தன. இதன் எதிரொலியாக சென்செக்ஸ் 10 சதவீதம் அளவுக்கு சரிந்ததால் வர்த்தகம் 45 நிமிடம் நிறுத்தி வைக்கப்பட்டது.
உலகம் முழுவதும் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனாவால் இந்தியா மட்டுமல்லாமல் உலக பொருளாதாரமும் கடும் சரிவை சந்தித்துள்ளன. ஒவ்வொரு நாட்டிலும் பங்குச்சந்தை வரலாறு காணாத சரிவை சந்தித்து வருகின்றன. இதன் எதிரொலியாக கடந்த ஒரு மாதமாக இந்திய பங்குச்சந்தைகள் ஆட்டம் கண்டு வருகின்றன. கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்திய பங்குச்சந்தை சரிவை சந்தித்த நிலையில் இன்றும் (மார்ச் 23) கடும் சரிவுடன் தொடங்கியது.