பீகார்:கொரோனா பாதிப்பு காரணமாக, பீகாரில் ரேஷன்கார்டு உள்ள குடும்பத்தினருக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
கொரோனா பாதிப்பை தடுக்கும் வகையில் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. சுகாதாரத்துறை மற்றும் அரசு அமைப்புகள் முடுக்கிவிடப்பட்டு, பரிசோதனை, கண்காணிப்பு தொடர்கின்றன. சில மாநிலங்கள் தங்களது எல்லையை அடைத்துவிட்டன. இந்நிலையில் பீகாரில் ரேஷன்கார்டு உள்ள குடும்பத்தினருக்கு ஒரு மாத ரேஷன் பொருட்கள் இலவசமாக வழங்கப்படும், கடையடைப்பு உள்ள பகுதிகளில் ரேஷன்கார்டுதாரர்கள் ரூ. 1000 பெறலாம் என முதல்வர் நிதிஷ்குமார் அறிவித்துள்ளார்.
பீகாரில் ரேஷன்கார்டுதாரர்களுக்கு ஒரு மாத பொருட்கள் இலவசம்