புதுடில்லி: இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 4,421 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 114 ஆகியுள்ளது.
இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை: கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 4,421 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 748 பேரும், தமிழகத்தில் 621 பேரும், டில்லியில் 523 பேரும், கேரளாவில் 327 பேரும், தெலுங்கானாவில் 321 பேரும், உ.பி.,யில் 305 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், கொரோனா வைரசால் 114 பேர் உயிரிழந்துள்ளனர். 326 பேர் குணமடைந்துள்ளனர். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.